search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கிரிமியா கல்லூரியில் குண்டு வெடிப்பு"

    உக்ரைனில் இருந்து பிரிக்கப்பட்டு ரஷ்யாவுடன் இணைந்த கிரிமியாவில் இன்று நிகழ்ந்த குண்டு வெடிப்பில் 18 பேர் உயிரிழந்ததாக முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. #Crimeacollege #Crimeacollegeblast
    மாஸ்கோ:

    1991-ல் சோவியத் யூனியன் உடைந்தபிறகு, சுமார் 13 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த 2014-ல் உக்ரைன் நாட்டின் கிரிமியா பகுதியை ரஷியா தன்னுடன் இணைத்துக் கொண்டது.

    உக்ரைன் விவகாரத்தில் கிரிமியா பகுதி மக்கள் அவர்களின் விருப்பத்தின்பேரிலேயே தங்கள் நாட்டுடன் இணைந்ததாக ரஷியா தரப்பில் தெரிவிக்கப்பட்டாலும், இவ்விவகாரத்தில் சர்வதேச நாடுகளின் எதிர்ப்பு அதிகமாகவே இருந்து வருகிறது.

    எனினும், ரஷியாவின் முக்கிய நகரங்களில் ஒன்றாக கிரிமியாவை அந்நாடு மக்கள் கருதி வருகின்றனர்.

    இந்நிலையில், கிரிமியாவில் கருங்கடலையொட்டியுள்ள கிழக்கு பகுதியான கெர்ச் நகரில் உள்ள தொழில்நுட்ப கல்லூரியில் இன்று நடந்த தாக்குதலில் 18 பேர் உயிரிழந்ததாகவும் சுமார் 40 பேர் காயமடைந்ததாகவும் முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

    குண்டுவீச்சு தாக்குதலில் இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டதாகவும், அதே கல்லூரியில் படிக்கும் ஒரு மாணவன் நடத்திய துப்பாக்கிச் சூடுதான் காரணம் எனவும் ரஷிய ஊடகங்கள் மாறிமாறி செய்தி வெளியிட்டு வருகின்றன. #Crimeacollege #Crimeacollegeblast
    ×